தஞ்சாவூர்:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தஞ்சை மாவட்டம் திருமாண்டகுடியில் இயங்கி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளின் உடந்தையோடு விவசாயிகள் பெயரில் கடனை வாங்கி மோசடிசெய்ததன் மீது நடவடிக்கைஎடுத்திடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட எஸ்பியிடமும் புகார் அளித்தனர்.கும்பகோணத்தில் உள்ள கார்ப்பரேசன் வங்கியில் 212 விவசாயிகள் பெயரில் ரூ.45 கோடி கடனை வாங்கிக் கொண்டு ஆலைநிர்வாகம் மோசடி செய்ததன்மீது கபஸ்தலம் க.ராமகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயி காவல்மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பெயரில் 417, 418, 420, 465ஐபிசி பிரிவுகளில் ஆரூரான்ஆலை நிர்வாக இயக்குநர்மற்றும் பிரிவுகளில் ஆரூரான் மீதும், கும்பகோணம் கார்ப்பரேசன் வங்கி அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் இந்த மோசடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடக் கோரி போராடி வருகிறது.தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்மாவட்ட காவல்துறை, மாநிலஅரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் அம்பிகா ஆலைகள் தரவேண்டிய ரூ.210 கோடியைமாநில அரசு பெற்றுத் தர வேண்டும். 5000க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பெயரில் ஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலைவாங்கி கடனை ஆலையின்பெயரில் மாற்றி விவசாயிகளை கடன் சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும். அம்பிகா, ஆரூரான் சர்க்கரைஆலைகளை தமிழக அரசு
ஏற்று நடத்தி கரும்பு விவசாயத்தை, விவசாயிகளை பாதுகாத்திட வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.