தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், வெள்ளிக்கிழமை நடை பெற்ற, தேசிய பச்சிளம் குழந்தைகள் நல வார நிறைவு விழாவில் ஆட்சியர் ம.கோவிந்த ராவ் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்க ளுக்கு பரிசுக் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து, மருத்துவமனை பிரசவ வார்டினை பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், அரசு மருத் துவர்கள், செவிலிய பயிற்சி மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.