தஞ்சாவூர் ஆக.31- இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம், தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ந.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ந.நெடுஞ்செழிய பாண்டியன், சு.குண்டுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசன் கண் மருத்துவமனை குழுவினர் மொத்தம் 127 பேரிடம் பரிசோதனை செய்தனர். மேலும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.