தஞ்சாவூர், ஜூலை 7- பள்ளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடை க்கக்கூடிய வகையில், பள்ளி சத்துணவு மையங்கள் மூல மாக உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடு ப்பு பணிகளுக்கு 40 வய துக்கு மேல் உள்ளவர்களை, பணிபுரியச் சொல்லி கட்டா யப்படுத்துவதை அரசு கை விட வேண்டும். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியது போல், குறை ந்த ஊதியம் பெறும் சமைய லர், சமையல் உதவியாளர்க ளுக்கு 60 வயதாக உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் சமூக சமையலறையில் சமைத்த சத்துணவு ஊழி யர்களுக்கும், சோத னைச்சாவடிகள், கணக்கெ டுப்பு பணியாற்றிய ஊழியர்க ளுக்கும் ஊக்க ஊதியம், பயணப்படி வழங்க வேண்டும்.
திருவண்ணா மலை மாவட்டத்தில் சமூக சமையலறையில் சமையல் செய்து வழங்கியதற்கு 62 நாட்களுக்கான உணவு தயாரிப்பு செலவினத்தொ கையை உடனடியாக வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முத ல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழகம் முழு வதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செவ்வா ய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தஞ்சாவூரில் ஒன்றியத் தலைவர் ஆர்.வீராசாமி தலைமை வகித்தார். மாவ ட்டச் செயலாளர் தி. ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவர் எஸ்.பரசுராமன் தலைமை வகித்தார். பேராவூரணி ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு தலைவர் திருச்செல்வம் தலைமை வகி த்தார். நீடாமங்கலம் வட்ட த்தில் கிளை தலைவர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.