கும்பகோணம், ஜன.21- வரும் ஜன.23 முதல் 27 வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய சிஐடியு 16 வது மாநாட்டை ஒட்டி வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பிரச்சார குழு சிஐடியு தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயபால் தலை மையில் வருகை தந்ததையொட்டி திருவிடைமரு தூர், கும்பகோணம், தாராசுரம், பாபநாசம் பகுதி களில் சிஐடியு, சிபிஎம், ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவிடைமருதூர் தோழர் பிஆர் நினை வகத்தில் நடந்த நிகழ்வில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா. ஜீவபாரதி, என்.பி.நாகேந் திரன், ஆர்.சேகர், ஜி.பக்கிரிசாமி, டி.சொக்கலிங் கம், கும்பகோணத்தில் எல்லையில் இருந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் பேரணி யாக வந்து காந்தி பார்க் அருகே பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் அரசு போக்குவரத்துத் தொழிலா ளர் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் கண்ணன், தாமோதரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநி லக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஆட்டோ கௌரவத் தலைவர் செந்தில்குமார் கார்த்தி கேயன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், வட்ட செயலாளர் பக்கிரிசாமி, வட்டத் தலைவர் துரைராஜ் மற்றும் மைதீன் புகையிலை ஏஆர்.ஆர் சீவல் தொழிலாளர்கள், சில்வர் தொழிலாளர்கள் மாட்டுவண்டி தொழி லாளர்கள், பாபநாசத்தில் மத்திய மின் ஊழியர் சங்க பொறுப்பாளர் காணிக்கை ராஜ் இளங் கோவன் கணேசன் மாலதி உள்ளிட்ட சிஐடியு சங்க தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சாவூர்
இப்பயணக்குழுவிற்கு தஞ்சை கரந்தை அருகில் உள்ள கோடியம்மன் கோயில் அருகில் இருந்து, நூற்றுக்கணக்கான இருசக்கர வாக னத்தில் கலந்து கொண்ட ஏராளமானோர் ஊர்வல மாக அழைத்து சென்று ரயிலடியில் வரவேற்பு அளித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் து. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக மத்திய சங்க தலைவர் பி.முருகன் வரவேற்றார். சுடர் பயணக்குழுத் தலைவர் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் மாநாட்டை விளக்கிப் பேசினார். ஓய்வூதி யர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி நன்றி கூறினார். நிகழ்வில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். ராஜாராமன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் முருகேசன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.என்.பேர் நீதி ஆழ்வார், கல்யாணி, மாவட்ட நிர்வாகிகள் த.முருகேசன், கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், எஸ்.மில்லர் பிரபு, ஆட்டோ ஊழியர் சங்கத் தலைவர் சாமி நாதன், தரைக்கடை சங்கம் மாவட்ட தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா, தையல் தொழி லாளர் சங்கம் வனரோஜா, சுமைப் பணி தொழிலாளர் சங்கம் நமச்சிவாயம், டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் ரமேஷ், விரைவுப் போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் முருகேசன், ரயில்வே ஒப்பந்த தொழிலா ளர் சங்கம் நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.அபிமன்னன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.அருளரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாலை ஊரணி புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு பயணக்குழு புறப்பட்டுச் சென்றது.