தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சுகுணா தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான மா.கோவிந்தராசு மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். கரிசவயல் அரசினர் மேல்நி லைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழ ங்கும் விழாவிற்கு பள்ளி தலை மையாசிரியர் வீ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அழகியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்நாகூர் மீரா மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி பேசினார்.