தஞ்சாவூர்,டிசம்பர்.30- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொறுப்பு பதிவாளர் தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு துணை வேந்தர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கிடையே பல்வேறு மோதல்களும், சர்ச்சைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் முறையான கல்வித்தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.