tamilnadu

img

பேராவூரணியில் அத்தியாவசியப்பொருள் கடைகள் மறு ஆலோசனைக்குப் பிறகே திறக்கப்படும் வட்டாட்சியர் நடத்திய கூட்டத்தில் முடிவு

தஞ்சாவூர் மார்ச்.25- கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில்  நாடெங்கிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால், மளிகைக் கடை, மருந்துக் கடை கள் திறக்கலாம் என அரசு அறி வித்துள்ளது.  ஆனால், இந்நிலையில் கடை வீதியில் தேவையற்ற கூட்டம் கூடுவ தாக பேராவூரணி வட்டாட்சியருக்கு புகார் வரப்பெற்றது. இதையடுத்து வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலை மையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழ மையன்று நடைபெற்றது.  இதில், “அரசின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை, மருந்துக் கடை, பால் கடை தவிர்த்து அனைத்து  கடைகளையும் மூட வேண்டும். மறு ஆலோசனைக்கு பிறகு மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப் படும்.  மேலும் கடைவீதியில், தெருக்க ளில் சரியான காரணமின்றி சுற்றித் திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.

 வெளிநாடு, வெளி மாநிலங்க ளில் இருந்து வீடு திரும்பியோர் வீட்டை விட்டு வெளியேறாமல் தனித்து இருக்க வேண்டும். அவர்கள் வீடுகளில் ஒட்டப்படும் வில்லைகளை அப்புறப்படுத்த கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.  பால் விற்பனை கடைகள், மருந்த கம் ஆகிய இடங்களில் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாளர்கள் இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி ஒரு மீட்டர் இடைவெளியில் இருந்து பொருட்களை வாங்க வேண்டும்.  அதிகாரபூர்வ நடவடிக்கைகள் ஏதும் தெரியாமல் சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்மா னிக்கப்பட்டது. தொடர்ந்து அது குறித்து ஒலிபெருக்கி மூலம் விளம்பர அறிவிப்பு செய்யப்பட்டது.  

காவல்துறையினர் தாக்கியதாக புகார் 
பேராவூரணியில் கடைவீதிக்கு பொருட்களை வாங்க வந்த, சேகர் என்ற இரு சக்கர வாகன மெக்கா னிக்கை முன்னறிவிப்பின்றி காவல் துறையினர் திடீரென லத்தியால் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சேகர் கூறுகையில், “அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்கும் என அரசின் அறிவிப்பு காரணமாக, காய்கறி வாங்க வந்த என்னை காவல் துறையினர் சூழ்ந்து கொண்டு திடீரென லத்தியால் தாக்கினர். இதில் நிலை குலைந்து போனேன். உடல் முழுவதும் காயங்கள் உள்ளன” என்றார். சுகாதாரத்துறையினர், நாட்டா ணிக்கோட்டை பகுதியில் வெளி நாட்டிலிருந்து வந்தவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ள கண்காணிப்பு வில்லையை, வீட்டு உரிமையாளர் கிழித்து எறிந்ததாக புகார் எழுந் துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.  மேலும் காவல்துறையினர் முக்கிய வீதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி காரணமின்றி சுற்றி யோர் மீது வழக்கு பதிவு செய்தனர். பொதுவாக மதியத்திற்கு பின்னர் சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டது.

மருத்துவ முகாம் 
பேராவூரணி வட்டாட்சியர் அலு வலகத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா தலைமையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வருவாய்த்துறை பணியா ளர்கள் தங்கள் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்து கொண்டனர்.