tamilnadu

img

அழிந்து வரும் பாரம்பரிய இன சேவல்கள் விழிப்புணர்வு கண்காட்சி

தஞ்சாவூர், ஜூன் 3 - அழிந்து வரும் பாரம்பரிய இனமான கிளி மூக்கு, விசிறி வால் சேவல்களை மீட்டெடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சையில் கண்காட்சி நடைபெற்றது. தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை யில் உக்கடை எஸ்டேட் சார்பில் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் இடம்பெற்றன. அழகான மூக்கு கொண்ட முதல் தரத்தில்இருக்கும் 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவற்றிற்கு எல்.இ.டி., டி.வி பரிசளிக்கப்பட்டது. மேலும் அழகான மயில் போன்ற விசிறி வால் கொண்ட 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொபைல் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட சேவல்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் அளவிலான பரிசுகள் வழங்கப் பட்டன. கண்காட்சி ஏற்பாட்டாளர் விஸ்வநாதன் கூறுகையில், சேவல்களில் சண்டை சேவல், கத்தி கட்டு, வெத்தடிசேவல் என பல வகை உண்டு. அது போல்கிளி மூக்கு, விசிறி வால் என்பது ஒரு வகை. கிளி மாதிரி அழகான மூக்கு,மயில் மாதிரி அழகான வால் கொண்டதுஇதன் சிறப்பம்சமாகும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த சேவல்களின் பூர்வீகம் தமிழ்நாடு தான். இங்கிருந்து இவை மற்ற மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்தவகை சேவல்கள் சண்டைக்கு பயன்படுத்துவது இல்லை. இவை அழகிற் காக மட்டுமே ஒரு குழந்தை போல்நம் முன்னோர் வளர்த்து வந்தனர். இவைதற்போது அழியும் நிலையில் உள்ளது. இது நீடித்தால் எதிர்காலத்தில் இப்படி ஒரு சேவல் வகை இருந்ததே யாருக் கும் தெரியாமல் போய் விடும். எனவே இது போன்ற கண்காட்சி நடத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு நம் பாரம்பரியத்தை மீட்டெடுக் கும் வகையில் பலர் இவற்றை வளர்ப்பதற்கு ஆர்வமுடன் முன் வருவார்கள். நல்ல  தரமான செழுமையான சேவல்கள் ரூ.5 லட்சம் தொடங்கி 2 லட்சம் வரை விற்பனை ஆகிறது. ஒரு ஜோடி குஞ்சுகளின் விலை  5 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது என்றார்.