தஞ்சாவூர், ஜூலை 18- மின்வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர துப்புரவுத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐ டியு) மாவட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், பொருளாளர் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார். நிறைவாக ஒப்பந்த துப்பு ரவு தொழிலாளர் செல்வி நன்றி கூறி னார். தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் உள்ள தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பலருக்கு, பணி நிரந்தரம் செய்யப் பட்டது. அதே போல தஞ்சை மாவட் டத்தில், உரிய கணக்கெடுப்பு நடத்தி யும், இன்னும் பணி நிரந்தரப் படுத்தப் படாமல் 150-க்கும் மேற்பட்ட தொழி லாளர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து பணி நிரந்தரப்படுத்த வேண் டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.