tamilnadu

தஞ்சையில் கொரோனா பாதித்த முதியவர் பலி

தஞ்சாவூர், ஜூன் 6- கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த முதிய வர் சனிக்கிழமை அதிகாலை உயி ரிழந்தார்.  தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் சேர்ந்த 84 வயது முதி யவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் அவ்வப் போது வடசேரிக்கும் வந்து செல் வார். சென்னையில் கொரோனா தொற்று பரவி வருவதால், இவர் அங்கிருந்து வடசேரிக்கு கார் மூலம் மே 28- ஆம் தேதி வந்தார். இதைத் தொடர்ந்து இவர் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டார். இதை யடுத்து இவர், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொ ரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதில் இவருக்கு கொரோ னா தொற்று இருப்பது ஜூன் 4- ஆம் தேதி தெரிய வந்தது.  பின்னர் அவர் தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மீண்டும் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு வருவதற்குள் சனிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து வந்த பரிசோதனை முடிவிலும் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டது. இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளும் இருந்ததாகவும், மேலும் கொரோ னா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இறந்ததாகவும்  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.