தஞ்சாவூர், ஆக.1- இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதி லாக, புதிதாக தேசிய மருத்துவ ஆணை யத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.ராஜேந்திரன், பொரு ளாளர் ஏ.வினோத், இந்திய மருத்துவக் கழகத் தின் தஞ்சை கிளைத் தலைவர் மாரிமுத்து, செய லாளர் அமிர்தக்கனி, பொருளாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.