tamilnadu

img

தொடக்கக் கல்வியை அழிக்கும் அரசாணை 145-ஐ திரும்பப் பெறுக! தஞ்சாவூரில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

, செப்.7- தொடக்கக் கல்வியை அழித்து ஒழிக்கும் அரசாணை எண் 145 ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள் ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட் டார ஒருங்கிணைப்பாளர்கள் கே. பாஸ்கரன், ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஏ.ரெங்கசாமி, என்.கிட்டு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பி னர் கார்த்திக், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முரளி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் எழில் வாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், “தொடக்கக் கல்வியை அழித்து ஒழிக்கும் அர சாணை எண் 145 திரும்பப்பெற வேண் டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17-பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.  இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ரெங்கசாமி கூறுகையில்,” இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.13-ஆம் தேதி கல்வி மாவட்ட அளவில் பேரணியும், அத னைத் தொடர்ந்து 24ஆம் தேதி தஞ்சை யில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும். அரசு எங்கள் கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார்.  இதே போல தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.