சத்தியமங்கலம், டிச. 22- நாடு முழுவதும் பதற்றத்தை உண்டாக்கியுள்ள குடி யுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தினார். ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மகத்தான தோழர் ஏ.எம்.காதரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மக்கள் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் கே.எம்.விஜய குமார் தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கும், அரசியலமைப்புக்கும் விரோத மானது. எனவே மத்திய அரசு நாடும் முழுவதும் பதற்றத்தை உருவாக்கியுள்ள இந்த சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்தாக மாற்றுவ தும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து மாநில தலை வர்களையும், மக்களையும், ஜனநாயகத்தையும் அழித்து சிறைப்படுத்தி், வீட்டுக் காவலில் வைத்துள்ளதையும், தெருக்களில் மக்கள் நடமாட முடியாமல் செய்துள்ளதை யும் வன்மையாகக் கண்டித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைதலைவர் யு.கே.சிவஞானம், மாவட்டக்குழு உறுப்பினர் திருத்தணிகாசலம், நகர செயலாளர் பி.வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.