தஞ்சாவூர், ஜூலை 16- காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டி யக்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் (சிபிஎம்) தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஎம்) மாநிலச் செயலா ளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்டச்செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீரமோகன், தமி ழர் தேசிய இயக்கம் அயனாவரம் முரு கேசன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, விவசாயிகள் சங்க தலைவர் கக்கரை சுகுமாறன், சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராஜன், திராவிடர் கழக நகரத் தலைவர் முருகேசன், சி.பி.எம்.எல் மக் கள் விடுதலை அருணாச்சலம், விவ சாயிகள் சங்கம் அருண்சோரி, விடு தலைச் சிறுத்தைகள் சுரேந்திரன், வணி கர் சங்க தலைவர் அப்துல் நசீர், கிறிஸ் தவ நல்லெண்ண இயக்க ஜஸ்டின் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜூலை 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தஞ்சா வூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் நோக்கி நடைபெற இருக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட் டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒன்றிய அளவில் ஒருங்கி ணைப்புக் குழுக்களை உருவாக்கி கிரா மங்கள்தோறும் ஆதரவை திரட்டுவது. சட்டமன்றத்தில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவித்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண் டும். அதற்காக கொண்டு வரப்பட்ட தள வாடங்கள், இயந்திரங்களை அப்பு றப்படுத்த வேண்டும். ஹைட்ரோகார் பன் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக வழியிலான போராட்டத்தில் ஈடுபட் டோர் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்பப் பெற வேண்டும். காவிரி யில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் கேட்டுப் பெற வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட் டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமி ழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். ஆனால் இதற்கு மாறாக நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய அமைச்சர் பேசுகையில், ‘தமிழ கத்தில் ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறு வனங்களுக்கு இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். கொண்டு வரப்பட்ட தள வாடப் பொருட்களை அப்புறப்படுத்தி தமிழக மக்களை அரசு அமைதிப்படுத்த வேண்டும். பேரழிவுத் திட்டங்களை கைவிடக் கோரி தஞ்சாவூர், திருவா ரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்க ளில் ஜூலை 23 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை நோக்கி பேரணி யாகச் சென்று கோரிக்கை மனு அளிக் கப்படும்” என்றார்.