tamilnadu

img

திருவையாறு ஒன்றியத்தில் சிபிஎம் தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.6-


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு ஆதரவு கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 16 இடங்களில் தெருமுனை பரப்புரை கூட்டம் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் திருவையாறு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். திமுக திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.கௌதமன், வடக்கு ஒன்றியச் செயலாளர் வை.சிவசங்கரன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் சிறப்புரையில், ‘‘டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களைக் கொண்டுவந்து சுடுகாடாகும் முயற்சியில் மத்தியபாஜக, மாநில அதிமுக அரசு செயல் பட்டு வருகிறது. தமிழக நலன்களை அடகு வைத்து விட்டு மத்திய அரசின்கைப்பாவையாக தமிழக அதிமுக அரசுசெயல்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் முறையாக ஆறு, குளங்களை தூர்வாராததால் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடைமடைக்கு தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை கொண்டு வருவதாக, நமது கூட்டணி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் உறுதியளித்துள் ளார். விவசாயிகள் பெற்றுள்ள கடன்,கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். நூறுநாள் வேலை திட்டத்தை 150 நாளாகவும், கூலியை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார். கூட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், ஆர்.பிரதீப் ராஜ்குமார், கே.மதியழகன், பி.ஏ.பழனிச்சாமி, துரை.ராமலிங்கம், பி.செந்தாமரைச் செல்வி,என்.அறிவழகன், எம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.அந்தோணிசாமி, ஜே.ராவணன், ஆர்.சதானந்தம், யு.சங்கர், எஸ்.ஏ.அப் துல் கலாம் ஆசாத், என்.ரமேஷ்,பி.ராஜாங்கம், சோமசுந்தரம், கே.கலியமூர்த்தி, ஜி.புண்ணியமூர்த்தி, கே.வரதராஜன், மருதையன், ஹென்றிடேனியல், பிரபாகரன், டி.செல்வகுமார், கே.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வரகூர், கண்டமங்கலம், செந்தலை, மணத்திடல், கருப்பூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட 16 இடங்களில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.