tamilnadu

தனியார் பள்ளியின் செயலால் 4 பேருக்கு கொரோனா அச்சத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள்

தஞ்சாவூர், ஜூலை 9 - தஞ்சையில் தனியார் பள்ளியின் அலட்சி யமான செயல்பட்டால், 4 பேருக்கு கொரோ னாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். தஞ்சாவூரில் உள்ள பிளாசம் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி தாளாளர், சில  தினங்களுக்கு முன் மதுரை சென்று வந்து ள்ளார். அவருக்கு கடந்த 3 ஆம் தேதி  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனாத் தொற்று உறுதி செய்ய ப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்த முதல்வருக்கும் கொரோனாத் தொற்று உறுதியானது. இந்நிலையில், பள்ளி கட்டணம் வசூல் செய்யப்பட்டும், ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர். கட்ட ணத்தை செலுத்துவதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும் வந்து சென்றுள்ளனர்.

இதை மறைத்து பள்ளி நிர்வாகம் அமை தியாக இருந்து வந்த நிலையில், மாநக ராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடை த்துள்ளது. பள்ளி நிர்வாகத்திடம், பள்ளிக்கு  வந்த பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரி யர்களின் விவரங்களை கேட்டுள்ளனர். முத லில் பட்டியலைத் தர மறுத்த பள்ளி  நிர்வாகம், அதன் பின்னர், 140 மாணவர்கள்,  அவர்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி அலுவ லர்களிடம் வழங்கியுள்ளனர்.  இதைத் தொடர்ந்து, 52 பேருக்கு ஜூலை 5,  6 ஆம் தேதிகளில், தஞ்சை கல்லுக்குளத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு வரவழைக்கப்பட்டு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது. இதில், 2 பெற்றோ ர்களுக்கும், அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரிய ரின் 2 குழந்தைகளுக்கும் கொரோனா இருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களையும் கண்டறிந்து பரிசோ தனை செய்வதற்கான முயற்சியில் மாநக ராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைய டுத்து பள்ளிக்கு சென்று வந்த ஒரு சிலர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோ தனை செய்து வருகின்றனர். இது பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் சுகாதாரத் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் மிகவும் மெத்தன மாக செயல்பட்டு வருவதாக பலரும் குற்றம்  சாட்டியுள்ளனர்.