கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணகி பழனிவேல் மற்றும் கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு மாதர் சங்க பொறுப்பாளர் ஜோதி திரிசங்கு ஆகியோர் போட்டியிடுவதை தொடர்ந்து கீரனூர் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா. ஜீவபாரதி, தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தருமையன், ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.