தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் நகரின் பிரதான பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகனிடம் வழங்கப்பட்டது. அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல், செயலாளர் சேக்கனா எம்.நிஜாமுதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது, சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எம்.ஏமுகமது அப்துல் காதர், பேராசிரியர் எஸ்.பிகணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், அரிமா சங்க இயக்குநர் ஆர்.செல்வராஜ், எம்.அப்துல் ரஹ்மான் பங்கேற்றனர்.