சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ் சாயத்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராஜகுரு தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்திலுள்ள கிராம பஞ்சாயத்து களில் தலித் சமூக தலைவர்கள் சாதி ரீதியான பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்.கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 6 பஞ்சாயத்து தலைவர்கள் கொலை செய் யப்பட்டுள்ளனர். தலித் சமூகத்தினர் தலை
வர்களாக உள்ள பஞ்சாயத்துக்களில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுகிறது. தலித் தலைவர்களை தேசியக்கொடி ஏற்ற அனுமதிப்பது இல்லை. பஞ்சாயத்து அலுவலகங்களில் அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படுவது இல்லை. ஆவணங்களை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.
பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் படுகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.