தஞ்சாவூர், மே 26- விவசாயத்திற்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சா ரத்தை ரத்து செய்யும் விதமாக, மின்சார திருத்தச் சட்டம் - 2020 கொண்டு வந்து விவசாயிகள் வாழ்வை சீரழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் அரசு அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார். எம்.பெத்தை யன், கே.முத்துசாமி, பொன்.நட ராஜன், குருவிக்கரம்பை சம்பத் கலந்து கொண்டனர். மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பி.கே.ரெங்க சாமி தலைமை வகித்தார். கே.வி. கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கே.எஸ்.ரவிச்சந்திரன், டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்ட னர். பேராவூரணி பேரூராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு அமுதம் கே.கந்த சாமி தலைமை வகித்தார். ராஜ மாணிக்கம், ஆர்.ஜி.பாலு, ராஜ சேகர், பி.சங்கர் கலந்து கொண்ட னர். செங்கமங்கலத்தில் பகவத் சிங், எஸ்.பி.காந்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூக்கொல்லையில் உள்ள சேது பாவாசத்திரம் ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர், கே.சேக் இப்றாம்சா, நாட்டாணிக்கோட்டை துணை மின் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி என்.தனிக்கொடி தலைமை வகித்தனர். வட்டார செயலாளர் கணபதி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஞான சேகரன், வட்டச் செயலாளர் ருக்ரு தீன், தங்கையா, விஸ்வலிங்கம், நீலகண்டன், அசாருதீன் கலந்து கொண்டனர்.