தஞ்சாவூர், பிப்.1- தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் விவசாயி கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கருப்புப் பட்டை அணிந்திருந்தனர். மேலும், காவிரி டெல்டாவில் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: திருவிடைமருதூர் ரவிச் சந்திரன்: விவசாயிகளை பாதிக்கும் திட்டம் என ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கூறி விவ சாயிகள் போராட்டம் நடத்தி வருகிறோம், இதில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன, இது தொடர்பாக அரசுக்கு அனுப் பப்பட்ட கருத்துரு என்ன என்பதை விளக்க வேண்டும். கடந்தாண்டு ஆற்றில் தண்ணீர் வந்த பிறகு தான் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. இந்தாண்டு முன்கூட்டியே தூர்வார வேண்டும். பாபநாசம் கண்ணன்: எங்களது பகுதி யில் நெல் மகசூல் பெருமளவு குறைந்து விட்டது. ஏக்கருக்கு 15 மூட்டுகளை தான் மக சூல் வந்துள்ளது. இதனால் விவசாயிக ளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அறுவடை இயந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த வாடகையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். சேதுபாவாசத்திரம் கூத்தலிங்கம்: கல்லணைக் கால்வாய் ஆற்றின் கரைகளை அகலப்படுத்தி 4,200 கன அடி செல்லும் வகையில் மறுசீரமைக்க வேண்டும். நெற்பயிரில் ஆணைக்கொம்பன் நோய் தாக்கியுள்ளதால் மகசூல் இழந்து பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பூதலூர் என்.வி.கண்ணன்: (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) நெல் கொள்முதலின் போது விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.30 லிருந்து 40 வரை கட்டாயமாக வசூ லிப்பதை தடுக்க வேண்டும். மாவட்டம் முழு வதும் ஆனைக்கொம்பன், புகையான் தாக்கு தலால் மகசூல் குறைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும். தூர் வாரும் பணிகளை உரிய காலத்தில் தொடங்கி முறையாக செயல்படுத்த வேண்டும். சுவாமிமலை சுந்தரவிமலநாதன்: 2016-ம் ஆண்டிலிருந்து பயிர் காப்பீடு திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. இழப்பீடு வழங்கலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எந்தந்த கிராமங்களில் எத்தனை சதவீதம் இழப்பு என்பதை காப்பீடு நிறுவ னங்களும், அரசும் ஒளிவுமறைவின்றி அறிவிக்க வேண்டும். ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார்: திருக்காட்டுப்பள்ளியில் பூட்டி இருக்கும் கால்நடை மருத்துவமனையை தினமும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ராபி, காரீப் என்ற பருவத்தின் வடமொழி சொல்லை இனி தமிழில் மொழி பெயர்த்து நம்முடைய பருவப் பெயர்களை அரசாங்கம் குறிப்பிட வேண்டும் என்றார். தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு வெட்டப் பட்ட கரும்புகள் இரண்டு வார காலமாக ஆலையில் அரவை செய்யப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடு தல் செலவும், அலைச்சலும் ஏற்படுவதால் கரும்பு சாகுபடியை இனி வரும் காலங்க ளில் கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள் ளப்படுவதை தடுக்க வேண்டும் என்றார். ஆட்சியர் ம.கோவிந்தராவ் பேசியதா வது: நெற்பயிரில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை மாநில அள விலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பல இடங்களில் வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தகவல் கிடைத்தும் அந்த இடங்களுக்கு அதிகாரிகள் செல்லாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு தூர்வாரும் பணி முன்கூட்டியே தொடங்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உழவர் அபிவிருத்தி குழுக்களை தொடங்கி கூடுதல் வருவாயை பெருக்க விவசாயிகள் முன் வர வேண்டும்” என்றார்.