தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள மழைநீர் வடிகாலின் சிமெண்ட் ஸ்லாப் சேதமடைந்து குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த வடிகால் குழியாக மாறி இருப்பதாலும், கம்பிகள் நீட்டிக் கொண்டு இருப்பதாலும் குழந்தைகள், பள்ளி, மாணவ, மாணவிகள் காலைக் கிழித்துக் கொள்ளும் நிலை உள்ளது. வயதானவர்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இவற்றை சீரமைத்து தர வேண்டும் என பேருந்து நிலைய கடை வியாபாரிகள் மற்றும் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.