தஞ்சாவூர், ஜூலை 21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பேராவூரணி கடைவீதியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியது. இப்பணிகள் பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் முன்பு முழுமை பெறா மல் பாதியில் விடப்பட்டதால் மழைநீர், வீடு கள் கடைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர், மழைநீர் வடிகால் வாய்க்காலில் விடப் பட்டு, சாக்கடை போல் தேங்கி நின்று, கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இவ்வழியே பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். கடைகளின் முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பேருந்துகள் செல்லும் போது பரவும் தூசி காரணமாக சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காரணமாக, இவ்வாறு ஏற் பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சுமத்து கின்றனர். மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் முன்பு, உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வாய்க்காலை முழுமைப்படுத்தி, தேங்கிக் கிடக்கும் சாக்கடை தண்ணீரை வெளியேற்ற வும், சாலைப் பணிகளை விரைந்து முடித்து தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.