திருச்சிராப்பள்ளி, ஜூன்4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபி சேகபுரம் பகுதிக்குழு சார்பில் இடைகமிட்டி செயலாளர்வேலுசாமி, கிளைசெயலாளர் கள் லெனின், கணேசன், ரவி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரி டம் கொடுத்தமனுவில் தெரிவித்திருப்பதா வது : திருச்சி – மதுரை ரோடு எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் நெடுஞ்சாலை யின் இருபுறமும் மழைநீர் வடிகால் வேலை கடந்த 5 மாதமாக நடைபெறாமலும், முழு மையாக முடிக்கப்படாமலும் இருந்து வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் விபத்து க்குள்ளாகின்றனர். மேலும் சுகா தார சீர்கேடுகள், இடைய+றுகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகிறோம். என அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.