தஞ்சாவூர். ஆக.20- கடைமடைப் பகுதிக்கு, தடை யில்லாமல் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் சென்று சேர, உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக் கோட்டை சார்ஆட்சியரிடம் அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.செல்வம், ஆர்.காசி நாதன், வீ.கருப்பையா, ஆர்.மாணிக் கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு சி.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ், நகர துணைச் செயலாளர் கல்யாண சுந்தரம், பூபேஷ் குப்தா, விவசாயிகள் சங்கம் பாஸ்கர், திராவிட முன்னேற்றக் கழகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் கா.அண்ணாதுரை, வா.வீரசேனன், மதுக்கூர் இளங்கோ, க.அன்பழகன், காங்கிரஸ் ஏ.ஆர்.எம்.யோகானந்தம், வழக்கறிஞர் ஆர்.ராமசாமி, காசிநாதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட னர். பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திரு வோணம் ஒரத்தநாடு ஆகிய கடை மடைப் பகுதிகளில் வாய்க்கால்களை முழுமையாகத் தூர்வாரி, சீரமைக்க வேண்டும். சில இடங்களில் ஓரளவே தூர் வாரப்பட்டுள்ளது. அதனை முழு மையாக தூர்வாரி மராமத்து செய்ய வேண்டும். கஜா புயலின் போது ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட வில்லை. நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளர்களை கொண்டு புல், பூண்டு கள் அகற்றப்பட்டுள்ளதே தவிர, பணி கள் ஓரளவே, சரி செய்யப்பட்டு உள்ளது. மேலும் காவிரி கிளை வாய்க்கால் களில் திறந்து விடப்பட்டுள்ள 500 கன அடி தண்ணீர் போதுமானதாக இல்லை. ஏரி, குளங்களை நிரப்ப கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும். கல்ல ணைக் கால்வாயில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலை மாறி, கரைகள் உடைப்பு ஏற்படும் எனக்கூறி, தற்போது படிப்படியாக 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள் ளது. இதனால் தண்ணீர் கிளை வாய்க் கால்களின் குழாய்களில் ஏறாமல், அந்த தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகி றது. எனவே, கிளை வாய்க்கால்களில் சென்று பாயும் வகையில், அதிக அழுத் தத்துடன் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது திறந்து விடப் படும் தண்ணீரை நம்பி நாற்று விட முடியாத நிலை உள்ளது. எனவே, 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும். போர்க் கால அடிப்படையில் கிளை வாய்க் கால், ஆறுகள், ஏரி, குளங்களை தூர் வார வேண்டும். வாய்க்கால்களை மரா மத்து செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வும், அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பி தரவேண்டும். மரா மத்து பணிகளை அந்தந்த பகுதி விவ சாயிகள் அமைப்புகள் கண்காணிப்பில் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இடுபொருட்கள், பயிர்க்கடன்களை வழங்க வேண்டும்” என வலியுறுத்தப் பட்டது.