திருப்பூர், டிச.28 - திருப்பூர் மாவட்ட தேர்தல் பார்வையாளா் இரா.கஜலட்சுமியிடம் அனைத்து கட்சியினர் சார்பில் சனியன்று மனு அளித்தனர். இம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. வாக்காளர் துணைப்பட்டியல் விதிமுறைப் படி மனுத்தாக்கல் கடைசி நாளான 16-ந் தேதி வெளியிட வேண்டும். ஆனால் வெளியிடப்படவில்லை. மேலும் தாமத மாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாமல் வழங்கப்பட்ட செயல் உச்சநீதிமன்ற அறிவுறுத்த லுக்கு எதிரானது. பூத் சிலிப்கள் முறையாக வாக்காளர் களிடம் கொடுக்கப்படவில்லை. 2 வார்டுகளுக்கு ஒரே வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் மையத்தில் மறைவிடம் 1 மட்டும் அமைத்திருந்ததால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டில் வாக்குப்பதிவு அலுவலர் வைக்கும் அச்சு சின்னம் முன் பகுதிகளிலும், பின் பகுதியில் வைத்த அச்சு முன்பகுதியில் தெரிந்ததால் வாக்க ளிக்கும் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்தல் பணி களில் ஈடுபட்டோருக்கு தபாலில் வாக்குச்சீட்டு அனுப்பப் படும் என்று கூறி அலைக்கழிக்கப்பட்டனர். 2-ஆம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. அப்பகுதி களில் வாக்களர் துணைப்பட்டியலை புகைப்படத்துடன் வெளியிட வேண்டும். மேலும் பூத் சிலிப்கள் வாக்காளர் களிடம் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு அலுவலர்கள் வைக்கும் அச்சை கண்டிப் பாக பின்புறம் வைக்க அறிவுறுத்த வேண்டும். தோ்தல் பணியாளர்களுக்கு சனிக்கிழமைக்குள் தபால் வாக்குச்சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் (இன்று) ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் அவா்களுக்கு வாக்குச்சீட்டு கிடைக்க தாமதம் ஏற்படும். கடந்த தேர்தலில் உள்ள குறைகளை களைந்து தற்போது நடைபெறும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.