tamilnadu

img

அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தல்

 தஞ்சாவூர், அக்.22- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடை பெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிரதீப் யாதவ் பேசியதாவது, சுகாதார பணி யாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிப்பதை உறுதி செய்திட வேண்டும். அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்களுக்கு உட னடியாக பரிசோதனை மற்றம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.  அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயா ளிகள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிட வேண்டும் என்றார்.  ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், இணை இயக்குநர் (மருத்துவம்) அ.காந்தி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ரவிந்திரன், தஞ்சா வூர் கோட்டாட்சியர் சுரேஷ், கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.