districts

பெண்கள்  அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், பிப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், ஜேசிஐ கீரமங்கலம் - பேராவூரணி சென்ட்ரல் மற்றும் நாண்டி பவுன்டேஷன், மஹிந்திரா பிரைட் கிளாஸ் ரூம் இணைந்து நடத்திய பெண் களுக்கான 5 நாள் இலவச கணினி பயிற்சி நிறைவு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ஜேசிஐ நிர்வாகி சத்திய மூர்த்தி தலைமை வகித்தார். இந்நிகழ்வில், தலைமை விருந்தினராக கலந்து கொண்ட பேராவூரணி காவல்  ஆய்வாளர் செல்வி, சிறப்பு  விருந்தினர்களாக குருவிக் கரம்பை சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி, ஜேசிஐ மண்டல ஒருங்கிணைப்பாளர் கருப் பையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மெய்ச்சுடர் மின்னிதழ் ஆசிரி யர் நா.வெங்கடேசன், பேரா சிரியர் முனைவர் வேத.கரம் சந்த் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.  பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி பேசுகை யில், “நாம் இன்னும் ஆணா திக்கம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.  பெண்கள் அதிக விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும். நம்  நலனில் மிகவும் அக்கறை  கொண்டவர்கள் பெற்றோர் தான். பெண்கள் சுதந்திர உணர்வோடும், அதே நேரத் தில் மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்” என்றார்.  சுமார் 70 பெண்கள் இந்தப்  பயிற்சியின் மூலம் பயன டைந்தனர். சிறப்பாக பயிற்சி  மேற்கொண்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சியில் கலந்துகொண்ட வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.