தஞ்சாவூர், ஜூன் 25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். 25-க்கும் மேற்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் பேசுகையில், “மண்ட பத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். மண்டபங்க ளை முன்பதிவு செய்த விபரங்க ளை வட்டாட்சியர் அலுவல கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நிகழ்ச்சியில் எவரும் கலந்து கொண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தினார். திருமண மண்டப உரிமையாளர்கள் சார்பில் மண்டப அளவிற்கு தகுந்தாற் போல் கூடு தலாக ஆட்கள் பங்கு பெற அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.