சென்னை, மே 25 - நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு நிலம் கைய கப்படுத்தப்படும் பணிகளில் நில உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.1,731 கோடி இழப்பீடாக வழங்கப்பட் டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை கிண்டி யில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்து வது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் செவ்வா யன்று ஆய்வு கூட்டம் நடந் தது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2010-ம் ஆண்டு முதல் விரைவாக நடை பெறாத காரணத்தால், பல் வேறு பணிகள் அரைகுறை யாக முடிந்த நிலையிலும், பல பணிகள் அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் தொடங்கப்படாத நிலையி லும் உள்ளன. நிலம் கைய கப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படும்போது நிலத்தின் மதிப்பு கூடுவதால், அரசு கூடுதல் தொகை வழங்க வேண்டியுள்ளது. கால தாமதத் தால் திட்டத் துக்கான மதிப்பீடும் பல மடங்கு உயர்கிறது. பணி களை குறித்த நேரத்தில் தொடங்குவதிலும், முடிப் பதிலும் தாமதம் ஏற்படுகி றது. இதனால் அரசு திட்டங் களை பொது மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப் பணிப்பது தாமதப்படுகிறது. இதுதவிர நிலம் கையகப் படுத்து வதற்கான நிதி ஒப்பளிப்பு செய்த பிறகு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், அரசுக்கு அதன் தொடர்பான வட்டியாக நிதி இழப்பு ஏற்படுகிறது. நிலம் கைய கப்படுத்தும் பணிகளில் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு, நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ் சாலைத்து றைக்கென 5 மண்டல நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 18 தனி வட்டாட்சியர் அலகுகள் தோற்றுவிக்க முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.. 2022ம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறையில் 802 ஹெக்டேர் நிலத்துக்கு நில எடுப்பு நடவடிக்கையின்கீழ் இறுதி தீர்வும் பிறப்பிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731.40 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசி னார்.