தஞ்சாவூர், பிப்.4- நூறு நாள் வேலைத் திட்டத் தொ ழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காத தைக் கண்டித்து அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆவணத்தி லும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூக்கொல்லை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஆ. இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ. கருப்பையா முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எம்.சின்னதுரை சிறப்பு ரையாற்றினார். ஆர்.கருப்பையன், ஜெகநாதன், குமார், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆவணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு சிறப்புரையாற்றினார். ஆர்.மாணிக்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.வி.குமார சாமி, கே.சி.ஆவான், ராமலிங்கம், பாஸ்கர், மாணிக்கம் உள்ளிட்ட 54 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாத சம்ப ளத்தை ரூபாய் 229 என்ற அடிப்ப டையில் குறைக்காமல் வழங்க வேண்டும். ஊராட்சியின் அனைத்து உட்கட்டமைப்பு பணிகளையும் 100 நாள் வேலைக்கு ஒதுக்கி திட்டமிட வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளத்தை ரூ400 ஆகவும், வேலை நாட்களை 200 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தப்பட்டன.