முன்னணி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. வழக்கத்திற்கு மாறாக கத்துக்குட்டி வீரர் - வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லி யம்ஸை சக நாட்டு 15 வயது சிறுமி கோரி காபு 6-4, 6-4 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து இரண்டா வது சுற்றுக்கு முன்னேறி டென்னிஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.இது அதிர்ச்சி யான சம்பவம் என்றாலும் இரண்டு பேருமே அமெரிக்கர்கள் தானே என அந்நாட்டு ரசிகர்கள் அமைதி யாக இருந்தனர். இரண்டாவது சுற்றில் ஸ்லோவேனியா வீராங்கனை போலோனோ அமெரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள் ளார். அதிரடிக்குப் பெயர் பெற்ற அமெரிக்காவின் மாட்டின்சன் கீஸ் ஸ்லோவேனியாவின் போலோனோ விடம் 2-6, 4-6 என்ற செட் கணக் கில் வீழ்ந்து முன்னணி வீரர் - வீராங்கனைகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துவிட்டு தொடரிலிருந்து விலகியுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொட ரில் அமெரிக்காவிலிருந்து 20க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். இதற்காகச் சொந்த நலன்களைக் கைவிட்டு விம்பிள்டன் தொடரை ரசிக்க வந்துள்ள அமெரிக்க ரசிகர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தருவதால் துவண்டு போய் ஆட்டத்தை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.