tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றில் ரோஜர் பெடரர்

நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய  ஓபன் தொடர் திங்களன்று தொடங்கியது. கடும் காற்று மாசுக்கு இடையே தொடங்கிய இந்த டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பலர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.   உலகின் மூன்றாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை 6-3, 6-2, 6-2 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காற்று மாசு பிரச்சனை காரணமாக 19-வது கோர்ட்டில் நடைபெற்ற  (ஆடவர் பிரிவில்) பெரும்பாலான ஆட்டங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.இந்த ஆட்டங்கள் தொடருமா? அல்லது நீக்கப்படுமா? என பிறகு முடிவு செய்வார்கள். கிரீஸின் சிட்ஸிபாஸ், பல்கெரியாவின் டிமிட்ரோவ், இத்தாலியின் பெர்ரெட்டினி  ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.   மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் பார்டி உக்ரைனின் லெசியாவை 5-7,6-1,6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது  சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல 3-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா, செக் குடியரசின் பௌஜ்கோவாவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது அடுத்த சுற்றுக்கு  முன்னேறினார்.