tamilnadu

img

மிக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் ராஜாங்கம்.... அ.சவுந்தரராசன் புகழாரம்....

தென்காசி:
தோழர் ம.ராஜாங்கம் உறுதியான பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் புகழாரம் சூட்டினார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாச்சியார்புரத்தில் மறைந்த முதுபெரும் தொழிற்சங்க தலைவர் எம்.ராஜாங்கத்தின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். சிஐடியு தென்காசி மாவட்ட செயலாளர் எம்.வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் மறைந்த தோழர் ராஜாங்கத்தின் நினைவுகள் குறித்து தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன  பொதுச் செயலாளர் திருச்செல்வன், முன்னாள் எம்எல் ஏ.ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு நெல்லை மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு மாநில செயலாளர் ரசல், சிஐடியு நெல்லை மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் ஆகியோர் பேசினர்.

நினைவேந்தல் கூட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் விடிவெள்ளி சமரசமற்ற போராளி தோழர் எம்.ராஜாங்கத்தின் வாழ்க்கை வரலாறு என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் வெளியிட ராஜாங்கத்தின் மகன் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசியதாவது:

மறைந்த தோழர் ராஜாங்கம் மிக உறுதியான பல போராட்டங்களை முன்னெடுத்தவர், சமரசம் இல்லா போராளி. தனது உடல் வலியை மறந்து செயலாற்றியவர். அதனால்தான் அவர் மக்களிடையே ஆளுமையாக தெரிகிறார். இவர் போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர்களின் பிரச்சனைகளில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். அவர் இறந்தாலும் அனைவரின் நெஞ்சத்திலும் வாழ்ந்து வருகிறார். ஒரு உருக்கு மனிதராக திகழ்ந்தார். இந்த பகுதியில் வலுவான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தி.கணபதி, வி.குணசீலன்,வேலுமயில், தங்கம், உச்சிமாகாளி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி, சிஐடியு தென்காசி மாவட்ட நிர்வாகிகள் தர்மராஜ், வன்னியபெருமாள், மணிகண்டன், லெனின்குமார், மகாவிஷ்ணு, ஆரியமுல்லை, லட்சுமி ரத்தினவேல்,ராஜசேகரன், அமல்ராஜ் கற்பகவல்லி, சக்திவேல், கிருஷ்ணன், குருசாமி, மாரியப்பன், சின்னசாமி, மாடசாமி, பாலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்டக் குழு உறுப்பினர் ராமசாமி நன்றி கூறினார். முன்னதாக தோழர் ராஜாங்கத்தின் நினைவிடத்தில் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.