தென்காசி
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். கொதித்தெழுந்த தமிழக எதிர்க்கட்சிகள், மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர். நடிகர் சூர்யா கொரோனாவுக்கு பயந்து நீதிமன்ற நீதிபதிகள் கான்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரிக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என நியாமான வாதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். சூர்யாவின் கருத்திற்கு நீதிபதி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வெடித்தது சர்ச்சை. நடிகர் சூர்யாவிற்கு பாராளுமன்றம் வரை ஆதரவு குரல் ஒலித்தது. சென்னை உயர் நீதிமன்றமும் சூர்யாவின் கருத்தில் அவமதிப்பு இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் தென்காசி பகுதியில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி சாதி அமைப்பினர் சாதி வாசங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனை கண்ட தென்காசி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
போஸ்டரில் இருந்த வாசகம்....
அறம் சீற்றம் என்பது அநியாயத்தை கவுண்டன் வருவது... கட்சி ஆரம்பித்து கொடி வைத்து முதல்வர் வேட்பாளராக்கி தேர்தல் சமயம் பார்த்து வருவதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.