tamilnadu

img

கொரோனா பரிசோதனையில் வெளிப்படை தேவை: ஜவாஹிருல்லா

சென்னை, ஏப்.4- கொரோனா பரிசோதனை முடிவு கள் அறிவிப்பில் அரசு வெளிப்படை யாக நடந்து கொள்ள வேண்டும் என்று  மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலை வர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- கொரோனா தொற்று நோய்க்கு எதிராக பல்வேறு நடவடிக்கை தமிழக  அரசு எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து தரப்பிலும் ஒத்துழைப்பு வழங்கி வரும் சூழலில் திடீரென தில்லிக்குச் சென்ற தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் பெருமளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.

தமிழக அரசின் சுகாதாரத் துறை யும் தில்லி சென்று வந்த தப்லீக் ஜமா அத்தை சேர்ந்தவர்களைப் பரி சோதனை செய்ய வலியுறுத்தியது. இதையடுத்து அரசு மற்றும் முஸ்லிம்  சமுதாய தலைவர்களின் கோரிக் கையை ஏற்று சுமார் 1104 தப்லீக் ஜமா அத்  அமைப்பினர் தாமாக முன் வந்து  பரிசோதனைக்கு ஆஜராகியுள்ளதாக சுகாதா ரத்துறை அறிவித்துள்ளது.

பாரபட்சமும்-மன உளைச்சலும்

இந்நிலையில் தில்லிக்குச் சென்று  வந்தவர்களில் கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக  அரசு அறிவித்து வருகின்றது. இவ்வாறு கொரோனா நோயால் பாதிக்  கப்பட்டவர்களுக்கு அவர்களது பரி சோதனை அறிக்கை முறையாக அளிக்கப்படவில்லை. மேலும், ஒரு தரப்பு மருத்துவ ஊழி யர்கள் உங்களுக்குத் தொற்று இல்லை என்று சொல்ல மற்றொரு தரப்போ இருக்கின்றது என்று சொல்ல மருத்துவமனை யில் உள்ளவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு இலக்  காகியுள்ளார்கள். எனவே தமிழக அரசு  இந்த விவகாரத்தில் வெளிப்படை யாக நடந்து கொள்ள வேண்டும்.  குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் அவர்களது குடும்பத்தி னருக்கும் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் நகலை அளிக்க வேண்டும்.

நியாயமற்ற செயல்...

இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக செயல்படாதது மக்களிடையே பெரும் சந்தேகத்தை யும் அச்சத்தையும் அளித் துள்ளது. சில அரசு மருத்துவமனைகளில்  கொரோனா நோயினால் பாதிக்கப்  பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்ட வர்களும் பாதிக்கப்படாதவர்கள் என்று அறிவிக்கப்படாதவர்களும் ஒன்றாகவே  தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். இது எந்த வகையி லும் நியாயமில்லை. திருச்சியில் உள்ள அரசு மருத்துவ மனையில் பரிசோதனைக்கு காலவதி யான சோதனை தாள் பயன்படுத்தப் பட்டுள்ளது என்ற தகவலும் வரு கின்றன. இது அதிர்ச்சியாக உள்ளது.  இந்த அவல நிலையை நீக்கத் தமிழக  அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

பல்வேறு அரசு மருத்துவ மனைகளில் சுகாதாரம் சரிவரப் பேணப்படவில்லை என்றும், தண்ணீர், கழிவறை வசதி போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.கொரொனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவை ஊழியர்கள் அனை வருக்கும் தேவையான மருத்துவக் கவசங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாற்றம் தேவை..

தனிமைப் படுத்துதல் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றாலும் இதனால் ஏற்படும் பதட்  டத்தைத் தணிக்கும் வகையில் வேறு எந்த வடிவில் நடைமுறைப் படுத்தலாம் என்பதைத் அரசு பரிசீலிக்க வேண்டும்.எந்தவொரு நோயினால் பாதிக்கப்பட்டவரின் பெயரைப் பகிரங்கமாக வெளியிடுவது சட்ட  விரோதமானது. ஆனால் தமிழ கத்தில் கொரோனாவினால்  பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் முழு விப ரங்களுடன் சில மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த  சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்க ளைக் கண்டுபிடித்து உடனடியாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு மருத்துவ பரிசோத னைக்கு வந்தவர்களை விரைவாகப் பரிசோதனை செய்து தொற்று உறுதி யானவர்களைத் தவிர மற்றவர்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவிக்கிறார்.