சென்னை, மார்ச் 30- தமிழகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட மாட்டாது என்று அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் திட்ட வட்டமாக தெரிவித்தார்.
கொரோனா பரவலை தடுக்க ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலை யில், 23 ஆம் தேதி மாலையுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில், வருகிற 31ஆம் தேதியில் இருந்து நேரக் கட்டுப்பாடுடன் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு முற்றிலும் மறுப்பு தெரி வித்துள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், ஏற்கனவே அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் தடை உத்தரவு முடியும் வரை மூடப்பட்டு தான் இருக்கும் என கூறி யுள்ளார்.