சென்னை, ஜூன் 1-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில்பழிவாங்கும் முறையில் தமிழக அரசால்தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களின் வாழ்வை மேம்படுத்த தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றிய சமரசமற்ற போராளி மு. சுப்பிரமணியன் தலைசிறந்த தலைவராக, உற்ற தோழனாக விளங்கியவர் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களிடம் நன்கு அறிமுகமானவர். அவர் தனது 32 வருட அரசு பணியில் அப்பழுக்கற்ற முறையில் நேர்மையாகவும் சீரியமுறையிலும் பணிபுரிந்தவர்.தமிழ்நாட்டில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் பரந்த மேடையான ஜாக்டோ- ஜியோ அமைப்பினை ஒருங்கிணைத்து பலகட்ட வீரம் செறிந்த போராட்டங்களை தலைமை தாங்கி திறம்பட வழிநடத்தி வெற்றிக்குவித்திட்டவர். இந்த போராட்டத்தின்போது அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு தலைமை தாங்கியவர்.இதனை பொறுத்து கொள்ளாத அதிமுகஆட்சியும் அதிகார வர்க்கமும் பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்துள்ளது. அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய அரசு மாநிலத் தலைவரை அரசு பணியில் ஓய்வு பெறும் நாளில் அரசு ஆணைகள் மற்றும் நீதி மன்ற தீர்ப்பாணைகளுக்கு முரணாக தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.ஆளும் ஆட்சியாளர்களின் இந்த கொடுஞ்செயலால் அரசு ஊழியர் சமூகமே அதிர்ந்துள்ளது. ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாநில அரசு மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் கண்மூடித் தனமான இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளனர். மேலும், சங்கத்தின் மாநிலத் தலைவர் மீதான தற்காலிக பணி நீக்க உத்தரவை தமிழக அரசும்விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரும் உடனே ரத்து செய்ய வேண்டுமென அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த கோரிக்கைக்காக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் ஜூன் 3 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் கலந்துகொண்டு அரசுக்கும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான அரசின் நெறியற்ற செயலையும் தமிழ் நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசின்அதிகார வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நீதிக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டனமுழுக்கங்கள் எழுப்புகின்றனர்.