சென்னை, டிச. 2- உள்ளாட்சித் தேர்தல் அறி விப்பு குறித்து அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனங்களை தெரி வித்துள்ளன. அதன் விவரம் வருமாறு: வைகோ(மதிமுக): உள் ளாட்சித் தேர்தல் என்பது மாந கராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத் தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழ்நாடு அரசு ஊராட்சி களுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும். தேர்தலையே தள்ளிப் போடுவ தற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் வகை யில் ஏற்பாடு செய்துவிட்டு, திமுக மீது அபாண்டமாக பழி சுமத்து வது ஆளும் அரசாங்கத்தின் தந்தி ரம் நிறைந்த சூழ்ச்சியாகும்.
தொல். திருமாவளவன் (விசிக): அடித்தட்டு மக்களுக்கும் அதி காரம் மற்றும் ஜனநாயகம் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைமுறையில் உள் ளது. ஆனால் அந்த நோக்கத் தைச் சிதைக்கும் வகையில் தற் போது தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை செய்துள்ளது. நகர்ப்புற அமைப்பு களுக்குத் தேர்தலை அறிவிக்கா மல் ஊரக அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது இது வரை இல்லாத ஒரு புதுமையாக உள்ளது. ஆளுங்கட்சியின் இத்த கைய ஜனநாயக விரோதப்போக் கிற்கு தமிழகத் தேர்தல் ஆணை யம் துணைபோவது அதிர்ச்சி யையும் வேதனையையும் அளிக்கிறது.
கே.எம். காதர் மொகிதீன் (முஸ்லிம் லீக்): மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகள் நீங்கலாக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது தமிழக தேர்தல் வரலாற்றில் விசித்திர மானது. அதுவும் இரு கட்டங்க ளாக நடைபெறும் என்று அறி வித்திருப்பது மிகுந்த ஆச்சரி யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தல் என்பதற்கு புதியதொரு விளக்கம் தர முனைந்திருப்பது தமிழக மக்க ளின் உணர்வுகளை அவ மதிக்கும் செயலே அல்லாமல் வேறில்லை.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): தமிழக தேர்தல் ஆணை யம் வெளியிட்டிருக்கும் அறி விப்பு பெருத்த எதிர்பார்ப்பில் இருந்த தமிழக மக்களுக்கு ஏமாற் றம் அளிக்கும் வகையில் அமைந் துள்ளது. ஊராட்சி அமைப்பு களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப் படும் என்று புதுமையாக அறி வித்திருப்பது அதிமுக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப் பதில் உள்ள தயக்கத்தையும் நடுக் கத்தையும் வெளிப்படுத்து கின்றது.