tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழக அரசு பொதுபோக்கு வரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

இந்தியா - சீனா உறவுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமை யாக மீட்டெடுப்பது அவசியம் என்று இந்திய வெளி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ.84. 91க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.78.86 என்ற விலையில் மாற்ற மின்றி விற்பனை செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன் பதிவு செய்த 1.13 லட்சம் பயணி களுக்கான முன்பதிவு பயணச்சீட்டு தொகை ரூ. 5 கோடி திரும்ப வழங்கப் பட்டுள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.

சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத் துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.