tamilnadu

img

தங்கம் விலை குறைந்தது

சென்னை,பிப்.3- சென்னையில் தங்கம் விலை திங்களன்று பிப்.3) சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள் ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 31 ஆயி ரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றமின்றி 3,922 ரூபாய்க்கு விற்ப னையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், திங்க ளன்று (பிப்.3) 28 ரூபாய் குறைந்து 3,894 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஞாயிற்றுக்கிழமை 31 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆப ரணத்தங்கம் திங்கட்கிழமை, 224 ரூபாய் குறைந்து, 31 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 90 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்த கத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் குறைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படு கிறது.