கீழடி உட்பட நான்கு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான விரிவான தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள மணலூர் , அகரம் , கொந்தகை , தூத்துக்குடி , கொற்கை , ஈரோடு மாவட்டம் கொடுமணல் , கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை , அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் முறையான தொல்லியல் கள அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர்,கொந்தகை , அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.