tamilnadu

img

திமுக எம்எல்ஏ  ஜெ. அன்பழகன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு

சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப் பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருப்பவர் ஜெஅன்பழகன். ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏற்பாடுகளை செய்து வந்தார்.இந்நிலையில், திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் 2 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்பழகன் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடமும் அன்பழகன் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ரேலாவிடம் கேட்டறிந்தார்.  மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட  அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. அதன் துணையோடு சுவாசித்துவந்த அவரது உடல்நிலையில் வெள்ளியன்று முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் டாக்டர் ரேலா கூறினார். வதந்திகளை நம்பவேண்டாம். அன்பழகன் உடல் நலம் தேறிவருகிறார் என்றும் அவர் கூறினார்.முன்னதாக அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையே  மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி வெளியிட் டுள்ள அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், சென்னை குரோம் பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் கடந்த 2 ஆம் தேதி கோவிட் 19 தொற்றுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான சுவாசக் கோளாறுகளுடன் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது.சுவாசக் கோளாறு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். வெள்ளியன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.