சென்னை:
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இது வழக்கமான பரிசோதனை என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்தது. இப்போது பூரணம் நலமுடன் உள்ளார். மிக விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகிச்சை அளித்து வரும் எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல் வத்தை முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி சென்று நலம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார்.கோவிட் 19 தொற்றுக்கு அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழ்நிலையில் முழு உடல்பரிசோதனைக்காக சென்னையில் செல்வந்தர் கள் மட்டுமே செல்லக்கூடிய சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு துணைமுதல்வர் சென்றது சமூக வளைத்தளங் களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு தலைமை தாங்குபவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண் டால் தான் பொதுமக்களுக்கு அந்த மருத்துவமனைகள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.அரசு மருத்துவமனையில் இல்லாத ஒரு சிறப்பு சிகிச்சைக்காக வேண்டுமானால் தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம். ஓமந்தூரார் அரசினர் பல் நோக்கு மருத்துவமனையில் முழு உடல்பரிசோதனை செய்யப்படுகிறது. ராயப் பேட்டை, சென்ட்ரல் அருகில் உள்ள பொது மருத்துவமனையிலும் செய்யப்படுகிறது.