tamilnadu

img

மோடி நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் போலியா?

புதுதில்லி:
லடாக் எல்லைப்பகுதிக்கு வெள்ளியன்று திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த ராணுவ வீரர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சில புகைப்படங்களும் மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அந்த புகைப்படங்கள் போலியானவை அல்லது போட்டோ ஷாப்செய்யப்பட்டவை என்று சர்ச்சை எழுந்துள்ளது. ராணுவ மருத்துவமனை எனக்குறிப்பிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில் புரொஜெக்டர் ஒன்று உள்ளது. இந்த புரோஜெக்டர் எப்படி மருத்துவமனை மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கேற்ப மருத்துவமனை புகைப் படங்கள் ஒன்றில்கூட மருத்துவ உபகரணங்களோ, மருந்துகளோ இல்லை என்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.“ஒரு மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் படுக்கைகள் மட்டுமே உள்ள ஒருமருத்துவமனையை நான் பார்த்ததில்லை” என்று ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் ஸ்வைன்கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் இந்த புகைப் படத்தை வைத்து, மத்திய பாஜக அரசைசாடிள்ளது.“எந்த கோணத்தில் இது ஒரு மருத்துவமனை போல் தோன்றுகிறது? படுக்கைகளுக்கு அருகில் குளுக்கோஸ் பாட்டில், மருந்து அல்லது தண்ணீர் பாட்டில்கூட இல்லை, ஒரு மருத்துவருக்கு பதிலாக ஒரு புகைப்படக்காரர் மட்டுமே இருக்கிறார்” என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் தத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.“நல்லவேளை, நம்முடைய வீரர்கள் அனைவரும் கடவுளின் கிருபையால் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறார்கள்...” என்றும் “பாரத் மாதா கி ஜெய்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மோடி பொய் சொல்வதற்காகவே பிறந்தவர். முதலில் இந்தியாவின் எல் லைக்குள் யாரும் நுழையவில்லை என்றார். இப்போது சீனா தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்ராணுவத்தினரைச் சந்தித்தாக போட்டோக்கள் வெளியிட்டுப் பொய் சொல்லுகிறார்” என்று மற்றொரு காங்கிரஸ் தலைவரான சல்மான் நிஜாமியும் விமர்சித்துள்ளார்.எனினும் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விவகாரம் குறித்துஇதுவரை பாஜக எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனிக்கு, 2011ஆம் ஆண்டு சிறப்பு ராணுவ லெப்டினண்ட் கலோனல் பதவி வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தின் பின்னணியிலிருந்த காட்சிகள்தான், தற் போது மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்ததாக கூறப்படும் மருத்துவமனை புகைப்படத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.