பேஸ்புக்கில் நாம் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நேரடியாகக் கூகுள் போட்டோ தளத்திற்கு மாற்றுவதற்கான வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் திங்களன்று வெளியிட்டுள்ளது. இந்த சேவையின் கீழ் நடைபெறும் அனைத்து டேட்டா இடமாற்றங்களும் என்கிரிப்டிங் செய்யப்படும், மேலும் கூகுள் போட்டோஸ் தளத்திற்குப் பரிமாற்றம் தொடங்கப்படுவதற்கு முன்பு பயனர்களிடம் பாஸ்வோர்டு கேட்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அதன் வலைத்தள பக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது. இந்த புதிய சேவை அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்குக் தற்பொழுது வழங்கி உள்ளது. இந்த வசதி உலகளாவிய பயனர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.