tamilnadu

img

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரம் - சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் அறிகுறி என்பது முதல் ஐந்து நாட்களுக்கு எந்த பதிப்பையும் ஏற்படுத்தாது, ஆகவே அறிகுறி தெரிந்தவுடனே பொதுமக்கள் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.  மேலும் டெங்கு காய்ச்சலினால் இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையும் தொடங்க உள்ள காரணத்தால் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறியுள்ளார்.