வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே தோட்டத்தில் 750 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது பாட்டில் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகோணானூரில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலுக்கு தகவல் கிடைத்ததாம்.இதையடுத்து வியாழனன்று தனிப்படை காவல்துறை யினர் நாககோணானூர் சென்று அதே ஊரைச் சேர்ந்த செல்லப்பன்(50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி தோட்டத்தில் பதுக்கி வைத்து சிறிது சிறிதாக ஊருக்குள் உள்ள பெட்டிக்கடைக்கு கொண்டு வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்லப்பனை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த ரூ 90 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.