tamilnadu

img

குழந்தை விற்பனை விவகாரம்

சென்னை, மே 13 -மலைவாழ் மக்களின் வறுமையையும், விழிப்புணர்வின்மையை யும் பயன்படுத்தி அவர்களது குழந்தைகளை கைமாற்றி விற்பனை செய்து அதன்மூலம் ஆதாயம் பெற்றுள்ள நபர்கள் யார்யார் என சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும்; அதுமட்டுமல்ல குழந்தை விற்பனை யின் பின்னணியில் உள்ள வலைப் பின்னலை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் குழந்தை கடத்தல்மற்றும் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் தமிழ கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பல ஆண்டுகளாக அரசுமருத்துவமனை செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் இதர அரசு நிர்வாகத்தின் உதவி யுடன் குழந்தைகள் விற்பனை செய்து வந்துள்ளதாக புகார் எழுந்துள்ள அடிப்படையில் கொல்லிமலை காவல்நிலையத் தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார் பாக ஒரு குழு கொல்லிமலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது.

இக்குழுவில் மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, துணைச் செயலாளர் எஸ்.கீதா, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், நாமக்கல் மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகள் கோமதி, சாரதா, பத்திரிகையாளர் கௌரி சங்கர், சுரேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவின் ஆய்வில் கிடைத்த விபரங்கள் குறித்து மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள செய்தி வருமாறு:மலைவாழ் மக்கள் காலம் காலமாக 2 குழந்தைகளுக்கு மேல் பிறந்தால் குழந்தை இல்லாத தங்கள் உறவினர்களுக்கு அக்குழந்தைகளை தத்து கொடுப்பது வழக்கமாக உள்ளது. சிலர் மஞ்சள்தண்ணீர் ஊற்றி சடங்கு, சம்பிரதாயங்கள் செய்து தத்து கொடுத்து விடுவதாக கூறுகிறார்கள். பெரும்பாலும் இரண்டு குழந்தை களுக்கு பிறகு மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தால் அக்குழந்தைகளை ஏன் வளர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். 90 சதம் பெண் குழந்தைகளும் 10 சதம்ஆண் குழந்தைகளும் தத்து கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கூறுவது, பெண் குழந்தை கள் என்றால் வளர்ப்பதில் சிரமம் எனவும் ஆண் குழந்தை என்றால் சொத்து வேண்டும், எங்கே செல் வோம் எனவும் கூறுகிறார்கள்.

இவ்வாறு வேண்டாம் என்று, குழந்தைகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக கொடுத்துவிடும் வழக்கம் இருந்து வந்துள் ளது. ஆனால் குழந்தை விற்பனை கும்பல் வந்த பிறகுதான் பெற் றோர்களுக்கு 5,000 முதல் 95 ஆயிரம் வரை பணம் கொடுத்து விட்டு குழந்தைகளை வாங்கி சென்றுள்ளனர். பின் பல லட்சங் களுக்கு அக்குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். தத்து கொடுக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. கிராம செவிலியர்கள் கர்ப்பிணிப் பெண்களை பதிவு செய்து முறையாக கண்காணிப்பது, குழந்தை பிறப்பு வரை பதிவு செய்து, பிறப்பைபதிவு செய்வது என்ற நடை முறையிலும் பலகீனம் உள்ளது.

அரசு நிர்வாகமும் சுகாதாரத் துறையும் அலட்சியமான போக்கு டன் செயல்பட்டுள்ளனர். இது போன்ற காரணங்களினாலும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் வசதி இல்லாத காரணத்தா லும் ஏழை மலைவாழ் மக்களின் மனநிலையை அறிந்து இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்து பணத்தை கொடுத்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளனர்.விற்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்பதுஇதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது இருவர்மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு பின்னால் ஒரு வலைப்பின்னல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வளர்க்க முடியாத குழந்தைகளை அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைக்க வைப்பதோ, சட்டரீதியான தத்துகொடுக்க உதவுவதோ, கருத்தடைசெய்துகொள்ள விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதோ அர சின் அடிப்படைக் கடமையாகும்.தற்போது சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விசாரணை முறையாக துரிதமாக நடக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இதுவரை விற்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்திட வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் முறையாக கர்ப்பிணிப் பெண்களை பதிவு செய்து, குழந்தை பிறக்கும் வரை கண்காணித்து பதிவுசெய்து ஆவ ணப்படுத்த வேண்டும். தொட்டில் குழந்தைகள் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். பிறப்புச் சான்றிதழ் உடனடி யாக வழங்கும் ஏற்பாடு நடைமுறைப் படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.